His Holiness Sri Parakala Mutt Swamy, Mysore is visiting and camping in their mutt in Pallathope, Mysore till 22nd January 2023.
அடுத்த இரண்டு வாரம் ஸ்ரீ பரகால மடம், மைசூர் ஜீயர் ஸ்வாமி சென்னை விஜயம். . நேற்றைய தினம், மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபத்தில், ஆச்சரியன் தலைமையில் நடந்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனம் (ஆராதனை) நடைப்பெற்றது.
ஆராதனை செய்யப்படும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் சிறிய விக்கிரகம் சாக்ஷாத் ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகரிடம் திருவகீந்திரபுரம் ஒளஷதகிரியில் அவரின் தவத்தில் மகிழ்ந்து அருளியது என நம்பப்படுக்கிறது, இந்த பெருமாளே இன்றுவரை ஸ்ரீ பரகால மடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் அளிக்கிறார்.
பக்தர்கள் காலை 11மணிக்கு அல்லது மாலை 7மணி அளவில் சென்று, இருந்து சேவிக்கலாம், வரும் (ஜனவரி) 22ஆம் தேதிவரை. தொடர்புக்கு: 044-4767 0493. மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபம் திருமயிலை பறக்கும் இரயில் நிலையத்தின் எதிரில் இருக்கும் சந்தில் இருக்கிறது, கார் உள்ளே போவது சிரமம், இருசக்கர வண்டிகளைக் கூட மைலாப்பூர் குளத்தின் அருகே அல்லது இரயில் நிலையத்தின் பார்க்கிங்கில் நிறுத்தி நடந்து (மூன்று/நான்கு நிமிட நடை தான்) செல்வது உகந்தது.