Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Poyyapakkam, Tamil Nadu 605103-ஸ்ரீ லக்ஷ்மிநாராயண வரதராஜப் பெருமாள் கோயில், பொய்கைப்பாக்கம், விழுப்புரம் 605 103. (Google Maps)
This is one of the oldest temples (around 1000 years) built by the Chola, Pandya and Vijaynagar kings. This temple is about 10 km from River Pennaiyar. It is said that as part of the culverts Goddess Sri Lakshmi and Sri Saraswathi took the blessings of Sri Varadarajan and Sri Nagaraja, to get Papavimosanam.


There is a Sri Lakshmi Hayagreeva Utsavar as well in this temple:


இத்திருத்தலத்தின் மங்களாஸாஸனம்
கார்வானும் சோலை மலை புல்லாணி மையம்
சீர்வானவர் பரவித்தொழ்ம் காணார்கள் சூழ்ந்த
பொய்கைப் பாக்கம் திகழ் மலரான்
மணவாளன் சரணமடைந்தேனே

இத்திருத்தலத்தில் எழுந்தருளி மங்களாஸாஸனம் செய்வித்த யதிசேஷ்டர்கள்:
- ஸ்ரீமத் தேர் எழந்தார் ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் தில்லை ஸ்தான ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் தேன்கனிக்கோட்டை ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் கோழியாலம் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் கருடபுர ஸ்வாமிகள்
- ஸ்ரீ ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்வாமிகள் (ஸ்ரீ முஷ்ணம்)

விழுப்புரம் அருகில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு:
விழுப்புரம் அருகில் உள்ள பொய்யப்பாக்கம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ இலட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலைப் புனரமைக்கும் திருப்பணியில் ஈடுப்பட்டப் போது சோழர் கால கல்வெட்டுக்கள் உள்ளதைக் கண்டறிந்தனர்.
இக்கோவிலின் வலப்பக்க நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு பல்லவர் கால எழுத்தமைப்பில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
இக்கோவிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டுக்களில் இராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்கசோழனின் கல்வெட்டுக்கள், குறிப்பிடத்தக்கவை. தற்போதைய பொய்யப்பாக்கம் பொய்கைப் பாக்கம் என வழங்கப்படுகிறது.
கருவறையில் உள்ள வரதராஜப் பெருமாள் பல்லவர் காலக்கட்டத்தைச் சார்ந்ததாக உள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்தில் செங்கற் தளியாக இருந்து சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வுகளை கல்வெட்டாய்வாளர் சு.இராஜவேல் மேற்கொண்டுள்ளார்.